Posts

அநாதைக்கருவாளிகள்!

Image
ஒற்றைக்கனவில் ஊடாடும் வாழ்க்கை துறவுக்கும் துணைக்கும் இடையில் இயைவு தேடி நகரும். வெளிச்சத்திரையில் கண்ணீர் கசியும் நொடிகளுக்காக போலிப்புன்னகை சுமந்து இடம்பெறும் பொழுதுகள் என்று இடம்பெயரும் ? வலிக்க வலிக்க செதுக்கிச்செதுக்கி செய்யும் தவம் உனதல்ல எனவும் அது எளிதல்ல எனவும் பறை . இக்கனா தேயம் அழிக்கும் தேயு. கனவின் தேளை தொடர என் தார்ட்டியம் அறியா உலகம் சிரிக்கும் ...பழிக்கும். என் துருவம் மரியா துல்லம் எதிரொலிக்கும் என்றென்றும். கனவின் நீட்சி எனை அழிக்கும் எனை மீள் உயிர்க்கும். தனை கரைத்து கலை புரியும் மகவுகளை சுவிகரிக்க யாருண்டு ? ஆனாலும் வாழ்வுண்டு. அநாதைக்கருவாளிகள் உயிர்க்கும் கருப்பைகள் இருப்பறியா இன்மையாய் துடிதுடித்தே உயிர்க்கும் . இறப்புக்கும் உயிர்ப்புக்குமான துலாபார நாட்கள் அது தீர்மானிக்கும் வாழ்நர் நாமங்கள். வாழ்வின் தாழ் திறக்கும் வரை தொடரும் இந்த ஒற்றைக்கனவில் ஊடாடும் வாழ்க்கை.!

திரை ஓவியன் -Gaspar Noé

Image
சமிப காலமாக இயக்குனர் Gaspar Noéவின் படங்களை பற்றி பலரும் பதிவிடுகின்றனர்.  சில வருடங்களுக்கு முன்னர் Gaspar Noéவின் படங்களை  திரைக்கதைபற்றிய சுய கற்றலில் அவரை பற்றி எழுதி சிறு ஆய்வு செய்திருக்கிறேன்.  ஓவியம் பற்றி முழுமையாக தெரியாததால் அப்படியே வைத்துவிட்டு வேறு படத்தில் மூழ்கி விட்டேன்.  இயக்குனர் Gaspar Noéஇன் படங்களை பலரும் பார்த்தாலும் அதில் உள்ள காமத்தை மட்டுமே வைத்து பேச முற்படுகின்றனர். இன்றைய சூழலில் காமம் பற்றி பேசுவதும் எழுதுவதும் அதிகரித்திருப்பதால் தங்களது கருத்துக்களுக்கு இவருடைய படங்களையும் துணைக்கழைப்பது நடந்துவருகிறது.  அது வெறும் அறிமுக நிலை தான் ! அதை தாண்டி நாம் செல்ல வேண்டியது முக்கியம்.  அதுதான் படைப்பாளி பற்றிய புரிதலை விதைக்கும் . ஆர்ஜென்டினாவின் கலை இலக்கியத்தில்  ''புதிய அடையாளத்தினை '' நிறுவியவர்களில் முக்கியமான ஓவியர்,எழுத்தாளர் Luis Felipe Noé. அவரின் மகன் தான் Gaspar Noé. Expressionism பற்றி தேடும் போது நிச்சயம் இவரை பற்றி அறிவீர்கள்.  Luis Felipe Noéவின் ஓவியத்தில் கையாண்ட intelle...

As we were dreaming

Image
பெருங்கனவின் சிறுதுயரம் It depends on your imagination my thoughts are elsewhere அரசியலும் உளவியலும் கூறுபோடுகிற  வாழ்வியல்  இவர்களுடையது....! கிழக்கு ஜெர்மனியின் இளைஞர் குழுவின் இலக்கற்ற பயணமும்  அவர்களின் வாழ்பனுபவங்களும் மாறிமாறி இடம்பெற்று  மீளிணைவின்(German reunification) வரலாற்றை  உணர்த்திக்கொண்டே இருக்கிறது. Clemens Meyerஇன் நாவலுக்கு Andreas Dresenஇன் திரை வடிவம் . படத்திலுள்ள இலக்கற்ற மனிதர்களின் கனவுகளின் கதைகளை  கொஞ்சம் பிரித்தாலே  பல நூறு குறும்படங்களிற்கு களம் காணலாம். நான், திரைமொழியின் அழகியலை ரசிப்பேன் என்றாலும்  அதில் உள் இணைவது கொஞ்சம் குறைவுதான். எப்போதும் அழுக்கின் அழகைத்தான்  மனம் விரும்புகிறது. இங்கே ....நிலையற்ற கமராவின் விழிகளில்  அகப்பட்ட இரவுகளில்... அழுக்கான குடியிருப்புக்களில்...  நீண்ட தெருக்களில் ... இன்னும் அலைந்துகொண்டிருகிறேன். நமக்குள் இருக்கும்  சிக்கலான மனநிலையை  வார்த்தைகளில் விபரித்து  பேசிவிட்டாலோ எழுதிவிட...

தாய்மையின் வெற்றிடம்

Image
You're changing that boy's life. No. He's changing mine. தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சி இந்தியாவிலிருந்து வருகை தந்த பிரபல மகப்பேற்று மருத்துவர், அவரை நேர்காணல் செய்ய தொகுப்பாளினி தயாராகிவிட்டார். 'குழந்தையற்ற தம்பதிகளின் வாழ்க்கையில் துயரங்களை அகற்றி உயிர்ப்பை ஏற்படுத்த வந்த கடவுளின் தூதுவர்' என்றெல்லாம் நான் புகழ்ந்து எழுதிக்கொடுக்க அதையே தொகுப்பாளினியும் பேச மகிழ்ச்சியுடன் நேர்காணல் இடம்பெற்றது. அவர் பெருமை பொங்க சாதனைகளை சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு அது பெருமையாக தெரியவில்லை. ஏன் என்றால் .... The Blind Side தாய் போதைப்பொருளுக்கு அடிமை தந்தையாலும் கைவிடப்பட்டநிலையில் குற்றப்பின்னணியில் வாழும் மைக் , அநாதரவான இளைஞன். 2 டீசர்ட்கள் மட்டுமே அவனது உடை, எழுத படிக்க சரியாக வராததால் வகுப்பில் யாரும் அவனை கண்டுகொள்வதில்லை. கல்லூரியில் எல்லோரும் சாப்பிட்டு வீசிய பாப்கார்ன் பக்கட்டுகளை எடுத்து அதில் இருக்கும் எஞ்சியதை உண்ணவேண்டிய நிலை. உறங்குவதற்கு கூட இடமில்லை ....இரவெல்லாம் தெருவில் நடந்து திரிகிறான் . ஒருநாள் எதேச்சையாக அவன் பள்ளியில் படிக்...

The Reader

Image
சிறை வாசகி ! We're changing the order we do things. Read to me first, kid. Then we make love. தனிமையில் இருக்கும் நடுத்தரவயது பெண் ஹனா , பதினாறு வயது கொண்ட மைக்கல் . இருவருக்குமிடையிலான சந்திப்பு காமத்தில் நுழைகிறது. அவள் அவனை குழந்தையாக கருதுகிறாள் அன்பு செலுத்துகிறாள். அவளது அன்பின் இன்னொரு வடிவம் காமம். மைக்கல் புத்தகங்களை வாசிக்க அதை கேட்டுக்கொண்டிருப்பது அவளுக்கு பெரும் நிம்மதியளிகிறது. ஒரு நாள் அவள் மைக்கலிடம் எங்கோ சொல்லாது சென்று விடுகிறாள். சில ஆண்டுகளுக்கு பின்னர் சட்டக்கல்லூரி மாணவன் மைக்கல் கோர்ட்டுக்கு வருகிறான் பிரபலமான வழக்கு அங்கு முக்கிய குற்றவாளி அதே ஹனா . வழக்கின் பல கட்டங்களில் மைக்கலுக்கு ஒரு உண்மை புரிகிறது ஹனாவுக்கு எழுத படிக்க தெரியாது அவள் அதை வெளிப்படுத்துவதில்லை நீதிமன்றத்திலும் அதை அவள் மறைத்துவிட குற்றவாளியாக சிறை செல்கிறாள். காலம் மாறுகிறது விவாகரத்தான மைக்கலுக்கு ஹனா ஞாபகம் . புத்தகங்களை வாசித்து ஆடியோக்களை பதிவு செய்து சிறையிலிருக்கும் ஹனாவுக்கு அனுப்ப அதை கேட்டு நிம்மதியடையும் ஹனா, சிறை நூலகத்தில் புத்தகங்களை எடு...

A Fighter's Blues

Image
தோற்றுப்போனவனின் கதை what's the most difficulty being a boxer? it is how to win boxer என்பதை தாண்டி பல சந்தர்பங்களில் இதே கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஜெயித்தல்/வெற்றிபெறுதல் என்றால் என்ன ? எதை எல்லாம் எப்படி ஜெயிக்கலாம்? வெற்றி என்பது பணம்,அடையாளம்,புகழ் என்பதை தாண்டி வேறு எதுவுமே இல்லையா ? வெற்றிக்கான திறமையும் உழைப்பும் இருந்தாலும் கடைசிவரை அதை அடையமுடியா மனிதர்கள் ? தோற்றுபோனவர்களுக்கு பின்னே தோற்கடிக்கப்பட்ட கதைகளும் மறைந்துதானே இருக்கின்றன. அதுபோன்ற உலகமறியா கதைக்கு சொந்தக்காரனின் வாழ்க்கை A Fighter's Blues. ANDY குத்துசண்டை வீரன் , அவனை பேட்டி எடுக்க வந்த பெண்ணோடு காதல், ஒரு குத்துசண்டை போட்டி மாட்ச் பிக்சிங்கில் அவன் தோற்றுபோக வேண்டும். அவனது நிலையை பார்த்து காதலி வருந்த இயலாமையிலும் அவமானத்திலும் துடித்துபோகும் ANDY, ஒரு கட்டத்தில் சக போட்டியாளனை அடிக்க அவன் இறந்துவிடுகிறான். ANDYக்கு சிறை தண்டனை கிடைகிறது. பல வருடங்கள் கழித்து சிறையிலிருந்து திரும்புபவன் காதலியை தேடிப்போகிறான். காதலி என்றோ இறந்துவிட்டதாகவும் அவர்களுக்கு ஒரு மகள் இருப்பதாகவ...

கேள்விகளைத்தேடும் பதில்கள்!

Image
நாடு திரும்ப இன்னும் ஒரு நாள் மட்டுமே இருந்தநிலையில் பொருட்கள் வாங்க chinatownல் உள்ள Petaling Street Marketக்கு வந்தோம் பொருட்கள் வாங்கிகொண்டிருக்கையில் திடிரென்று மழை பெய்யவே அம்மாவையும் சித்துவையும் பேருந்து தரிப்பிடத்தில் அமர சொல்லிவிட்டு அருகிலிருந்து கடைக்கு பொருட்கள் வாங்கச்சென்றேன். இருபது நிமிடங்களில் திரும்பிவந்தால் , சித்துவோடு ஒரு வெள்ளைக்கார நடுத்தரவயது மனிதர் சிரித்துகொண்டிருந்தார். நான் வந்ததும் அம்மா,என்னை மகள் என்று அறிமுகப்படுத்தினார். புன்னகையோடு பேச்சை ஆரம்பித்தார். ஐரோப்பியர் அல்ல அமெரிக்கர் என்பதை அவருடைய ஆங்கிலம் உணரவைத்தது. சித்துவின் கண்கள் மிக வசீகரமாக உள்ளதாகவும் அழகான பையன் என்று கூறிவிட்டு என்னைப்பற்றி கேட்டார். என் விபரங்களையும் தொலைக்காட்சி பணிபற்றியும் கூறினேன். நான் அவர் பற்றி கேட்க , தான் ஒரு இஸ்லாமியன் என்றும் வங்கி ஊழியன் என்றும் கூறினார். அமெரிக்காவில் தன்னால் வசிக்க முடியவில்லை, நிறைய பிரச்னைகள் இஸ்லாமிய நாட்டுக்கு செல்லவேண்டும் என்று முடிவெடுத்து மலேசியா வந்துவிட்டதாக கூறினார். சொல்லும்போதே சற்று குரல் தளர்ந்துவிட்டது. அத...