நாகலிங்க பூ உலகம்முழுவதும் சைவர்களால் சிவ அம்சமாக வணங்கப்படும் பூக்கள் தான் நாகலிங்கப் பூக்கள். ஏன் என்றால் இதன் அமைப்பு ஒரு ஆன்மிக அதிசயம் பூவின் தோற்றம் சிவாலயத்தை நினைவு படுத்தும் வகையில் அமைந்திருக்கும். நடுவில் சிவலிங்கமும், அதைச்சுற்றி தவம் புரியும் ஆயிரக்கணக்கான முனிவர்கள் அவர்களுக்கும் மேல் பல ஆயிரம் தலைகளையுடைய பாம்பு இருப்பதைப்போல தெய்வாம்சம் நிறைந்த அழகிய வடிவில் காணப்படும். இதனை அதிசியப் பூ என்றே சொல்ல வேண்டும்அமைப்பில் சிவ லிங்கம், முனிகள், நாகம் என வினோதமாக இருப்பதைப் போலவே, நடைமுறை அறிவியலிலும் அதிசயமாக இருக்கிறது. இந்தப் பூ செடிகளில் பூப்பதில்லை. மரத்தில் பூக்கிறது. அதுவும் வேர்ப்பகுதிக்கு மேலேயும் கிளைகள் இருக்கும் பகுதிக்குக் கீழேயும் உள்ள இடைவெளிப் பகுதியில் தனியாகக் கிளை பரப்பி அதில் பூக்கின்றது. இதனுடைய காயின் அமைப்பு பந்து போலவே இருப்பதால், Cannon ball என்று வெளிநாட்டினர் அழைக்கின்றனர். நாகலிங்க மரத்தின் மீது கொத்துக் கொத்தாய் பூத்திருக்கும் நாகலிங்கப் பூக்கள் மென்மையான கவர்ச்சிகரமான பூக்களாகும். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில சிவாலயங்...
"பொழியாத மழையில்
ReplyDeleteகுடையோடு நடை பழகி" super lines