Posts

Showing posts from April, 2015

Bicycle Thieves

Image
Bicycle Thieves அறம் என்பது என்ன? திருட்டு அறமல்ல; குற்றம் என்பதை அறிவோம் ஆசையின் அடிப்படையில் நடக்கும் திருட்டு –குற்றம். அவசியத்தின்  அடிப்படையில் நடக்கும் திருட்டு??? பல்பொருள் அங்காடிக்கு முன்னால் உணவுப்பொதியை திருடி செல்பவர்களை எந்தஅடிப்படையில் குற்றவாளி என்பது? நாங்கள் பாதைகளோடு தெரு மனிதர்களையும் கடந்தே போகிறோம். எங்களது புறக்கணிப்பில் ஒரு மாபெரும் மக்கள் கூட்டம் குற்றசமுகமாக மாறிவருகிறது. ஒருவனது குற்றசெயலுக்கு பின்னணியில் நம் பெயரும் இருக்கிறது என்பதை கண்ணீரோடு உணர்த்துகிறது Bicycle Thieves  இரண்டாம் உலகயுத்தகாலம். இத்தாலியில் வேலையில்லாத்திண்டாட்டம் நிலவிவருகிறது .ஒரு இடத்தில் போஸ்டர் ஓட்டும் வேலைக்கு ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது .தங்கள் பெயர் பட்டியலில் வருமா என்று ஆவலோடு காத்திருகிறது ஒரு பெரிய கூட்டம் . மேலாளர் அந்தோனியோரிச்சியை அழைக்கிறார். அந்தோனியோரிச்சி வேலையற்ற குடும்பஸ்தன் .சந்தோஷத்தில் சென்றால் அந்த வேலைக்கு சொந்தமாக சைக்கிள் இருக்கவேண்டும் என்று மேலாளர் சொல்ல ,செய்வதறியாது தவிக்கிறான் அந்தோனியோ. சைக்கிள் இல்லை என்றால் எங்கே வேலை பறிபோய்விடும் என்று அற