Posts

Showing posts from February, 2015

Spirited Away

Image
கனவுகள் கற்பனைகள் என்பதன் ஆரம்ப புள்ளி எதுவாக இருக்கும் ? எனக்குள் எப்படி ஆரம்பித்தது இந்த கற்பனைகளின் பயணம்  என்று அடிக்கடி யோசிப்பேன் .... பனி படர்ந்த கண்ணாடியில் தெரியும் முகத்தோற்றம் மாதிரி என் நினைவுகளில் நிழலாடுகிறது அந்த பால்யகால சம்பவங்கள் தாத்தாக்கள் பாட்டிகளிடம் கதை கேட்ட நாட்கள் அவை . அவர்கள் சொல்லச் சொல்ல அதை மனதில் காட்சிப்படுத்திக் கொள்வது என் வழக்கம் . பாட்டிகளின் உலகத்தோடு ஆரம்பித்த இந்த வழக்கம் எல்லோரிடமும் கதை கேட்கும் நச்சரிப்பாகவே மாறியது.  ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு கதை இருக்கும்; பல சமயம் ஒரே கதை வெவ்வேறு விதத்தில் வெளிப்படும் . எதுவாக இருந்தாலும் எனக்கு கதைகள் ,அது தரும் கற்பனைகள், தனிமையை துரத்த தேவைப்பட்டது . காலப்போக்கில் பால்யம் தொலைய சினிமாவுக்குள் ஐக்கியமானேன். சினிமா தரும் கற்பனை உலகில் வசிக்க ஆரம்பித்த பிறகு கதைகளோடு வாழவே ஆரம்பித்து விட்டேன் . என்றோ கேட்ட கதைகளின் எச்சங்கள் இன்றைய பொழுதோடு சேர்ந்து கனவுகளில் துரத்தும் . அதை அரையுறக்கத்தில் ரசித்துக் கொண்டே உறங்கியும் உறங்காமலும் இரவை கழிப்பேன்.  இது என் வாழ்க்கையில் வழக்கமான வி

Nuit Blanche(Sleepless Night)

Image
Nuit Blanche( Sleepless Night) மனிதன் எப்போதும் சமுக பிராணி என்றாலும் குடும்பமாக வாழ்கையில் அவர்களுக்குள் எழும் உறவுச்சிக்கல், மனோரீதியாகவும்  மரபணுரீதியாகவும் அணுகப்பட வேண்டியது . உலகம் முழுவதும் குடும்ப அமைப்புகளை எடுத்துகொண்டால் பெரும்பான்மையான  தந்தை -மகன் பாசபுரிதல் ஒரே மாதிரியானதாகவே காணப்படுகிறது . அவர்கள் இருவருக்குள்ளும் அன்பிருந்தாலும் வெளிப்படையாக கட்டிக்கொள்ள மாட்டார்கள் . ஏதோ தயக்கம், ஒட்டுதலற்ற தன்மை இருந்துகொண்டே இருக்கும் . ஏதோ ஒரு சந்தர்பம் அவர்களுக்குள் அன்பை உணர செய்யும் தருணமாக  அமையும்.  அந்த நேரம் வெளிப்படும்  கண்ணீரும் புன்னகையும்தான் இருவரின் அன்பிற்கு சாட்சி . இந்த உணர்வை நீரோடை போன்ற கதையோட்டம் கொண்ட படங்களில் பார்த்திருப்போம் .ஆனால் வாழ்வா சாவா போராட்டத்தில் தந்தையும் மகனும் தங்களுக்குள் இழையோடும் பாசத்தையும் நேசத்தையும் உணர்ந்தால் ...?  அந்த தந்தை-மகன் கதைதான்    Nuit Blanche(Sleepless Night). அதிகாலை நேரம் - காரில் வரும் இருவர் முகமூடி அணிந்து கொள்கின்றனர் . இன்னொரு காரினை துரத்திபிடித்து அதிலுள்ள இருவரையும் துப்பாக்கி முனைய