Posts

Showing posts from March, 2014
Image
பெண் சமத்துவம் ? ''மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது ? அப்படி என்ன உங்களுக்கு உரிமை இல்லை பாரதி காலத்தில் உரிமை இல்லை என்று போராடினால் அது நியாயம் அன்று பெண்கள் அடிமையாக இருந்தார்கள் இன்று உங்களுக்கு என்ன குறை? படிக்க முடியும் வேலைக்கு போக முடியும் விரும்பியபடி பணம் உடை வாழ்க்கைமுறை வசதி வாய்ப்புக்கள் எல்லாம் இருக்கிறது உடன்கட்டை முறை கூட இல்லை எப்படி எல்லா கொடுமைகளும் ஒழிந்தாயிற்று இன்னும் என்ன உரிமை வேண்டும் ? அடக்குமுறை அடக்குமுறை என்று கூப்பாடு போடுகின்றிர்கள் பெண்ணியம் பேசுவது இப்ப ஒரு fashion எப்ப பார்த்தாலும் ஆண்களை குறை சொல்லிக்கொண்டு .....'' இப்படி தொடர்கிறது சிலரின் அங்கலாய்ப்பு .... இந்த வாரத்தைகளை கேட்ட போது எனக்கு கோபமே வரவில்லை .காரணம் பெண்ணுக்கு உரிமை உண்டு என்று சிந்திப்பது பெரிய விடயம் அந்த சிந்தையை வரவேற்கிறேன் முதலில் ஒருவிடயத்தை பதிவு செய்ய நினைக்கிறன் ஆண்கள் எல்லோரும் தவறானவர்கள் பெண்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று நான் கூறவில்லை இருவரும் மனிதர்கள் சரியும் தவறும் கொண்ட சராசரி வாழ்வை கொண்டவர்கள் தான் நாங்கள் ஆண்கள் தவறானவர்கள் அல்ல ....என் வ
Image
அன்றும்... இன்றும்... என்றும்... 7.35க்கு அலுவலகத்திலிருந்து வெளியே வந்தேன் ... தெருமுனையை கடக்க முன்னர் சைக்கிளில் வந்தவன்  சொன்ன அரைகுறை ஆபாச வாசகம் காதில் விழுந்தது  தொடர்ந்து நடந்தேன் .... பேருந்தில் நடந்துனர் பணம் வாங்கும் சாக்கில்  கைகளை தொட முயன்றார்.என் பக்கத்தில் நிற்கும் பெண்ணுக்கு மிகுதி பணம் கொடுக்கும் சாக்கில் உடலில் படுமாறு கைகளை நீட்ட முயன்றதை மெல்ல நகர்ந்து கைப்பையால் தடுத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தேன் நிறுத்தத்தில் இறங்கி நடந்தால் எதிர்படுபவன் அழைக்கிறான் ஏய்...பாப்பா என்று . அடுத்த வசனம் காதில் விழ முன்னர் நடையை வேகப்படுத்தினேன் இரவு இருளை கடைதெரு விளக்குகள் அகற்ற முயல... உள் வீதி வீடுகள் மட்டும் வரவேற்றுகொண்டன . அந்த அரைகுறை வெளிச்சத்தில் மழை சகதியில் அருவருப்போடு நடந்து கொண்டிருக்கையில் கூட நடந்த ஒருவன் அழைத்த வாரத்தைகளை கேட்டும் கேட்காதது போலவே மேலும் நடந்தேன் வீட்டை நெருங்க கொஞ்ச நேரமே இருந்த நிலையில் எதிர்பட்ட ஒரு கும்பல் விசிலடித்து நெருங்க சட்டென்று நகர்ந்து எங்கள் வீதி நுழைந்தேன் வீட்டில் நுழைந்து செருப்பைக் கழற்றுகையில்  கடிகாரத்தில் நேரம் பார்த்