Posts

Showing posts from December, 2012
Image
வன்புணர்ச்சி -  இதுவும் ஒரு  சம்பவம் !!!   உடல் வன்முறை அதுவும் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்ச்சி சம்பவங்களை ஒவ்வொரு முறையும் கடக்கும் போது வலிக்கும் . அந்த செயலை செய்த  ஆண்கள்  மீது  கோபம் ஏற்படும். அந்த சம்பவத்தை  நினைத்தாலே  மனமெல்லாம்  எரியும். உயிருள்ள பெண்ணை வெறும் சதையாக நினைக்கும்   ஆண்களை கொல்ல வேண்டும் எனும்  உணர்வு  தோன்றும் .  திரைப்படங்கள் பார்க்கும் போது கூட ஆண் அல்லது பெண் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படும் காட்சிகளை என்னால் பார்க்க முடியாது அந்த காட்சியை பார்க்காது கடத்திவிட்டாலும் ஒரு பெரும் பாரம் மனதை அழுத்த தொடங்கிவிடும் சில நாட்களாவது ஆகும் அந்த சுவடு மறைய ...அடுத்த திரைப்படத்தில் லயிக்கும் வரை அதே நிலைதான் மீண்டும் ஒரு வன்முறை செயல் ...பெண் உடல் மீதான வதைபடலம் அரங்கேறியிருகிறது.வழக்கம் போல கோபமும் வெறுப்பும் வந்தது. ஆனால் இம்முறை எனக்கு அதீத கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்திவிட்டது பாலியல் துன்புறுத்தலை செய்தவருடைய வாக்குமூலமும் அதை தொடர்ந்து வெளியான பத்திரிகை செய்திகளையும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை இரவுஆண்நண்பனுடன்ஊர் சுற்றி
Image
அன்னையை   தேடி  .... விழிமுடிடும்   போது   வழி   தேடிடும்   கனவு அலைபாயும்   உன்   நினைவு எனக்குள்ளே  - நீயின்றி அனாதையாய்   நகரும்   என்   பொழுதுகள் நித்தமும்... வேரை   தேடும்   பூவின்   தேடல் விதியை   வெல்ல   முடியாத   பாடல் பாடுகிறேன்   நானும் உன்னையே  ... நாடி என்   அன்னையை   தேடி  ....  ( விழிமுடிடும்  ) உன்   உயிரில்   உதித்த   உறவு   நான் என்   ஜீவ   தொடர்ச்சியில்   முடிந்தவள்   நீ நிழல்   தேடும்   என்   பிள்ளை   நெஞ்சம் நிஜம்   இல்லை   என்   தாய்   தான்   என்றும்   நினைவுகளோடு   கடக்கிறது   காலம் கனவுகளோடு   தொலைகிறது   நாளும் வேரை   தேடும்   பூவின்   தேடல் விதியை   வெல்ல   முடியாத   பாடல் பாடுகிறேன்   நானும் உன்னையே  ... நாடி என்   அன்னையை   தேடி  ....    ( விழிமுடிடும்  ) பனிக்குடம்   உடைத்து   கருவறை   நனைத்து உன்   இடைபிளந்து   பூமிக்கு   வந்தேன் வந்த   வழிகள்   தொலைந்திடவே போகும்   வழிகள்   வலித்திடவே தடுமாறி   தடம்   மாறி   தவிக்கிறேன்    நானே அலை   அழித்த   கால்   தடங்கள்   பார்க்கமுடிய
Image
மழைவழிப்பயணம்   குடையோடு மழை தொடர்கிறது வழியில் என் தடம் மாறிய முதல் வழிபயணம் மழையோடு தொடர்கிறது இன்னும்... வழியெங்கும் வலிகள் இருந்தும் தொடர்கிறது என் மழை கடக்க முடியாது கடந்த நொடிகள் மன அடுக்குகளில் ... அன்போடு கைப்பிடித்து நடைபழக்கி ரசிந்த உள்ளங்கள். அவர்கள் விரல்பிடிக்க வழிவகுத்த காலம் வேடிக்கை பார்க்க தொடர்கிறது பயணம் மகிழ்ந்து அழுது கரைந்து உணர்ந்து தெளிந்த பயணத்தில் நான் நாளை இடம்மாறி தடம்மாறி போனாலும் என்னை எனக்கே உணர்த்திய இந்த மழை நிழல் போல நினைவில் என்றென்றும் தொடரும் குடையோடு மழை தொடர்கிறது வழியில்
Image
மழை நேர மாலை... மழை பொழிய தொடங்கும் தருணம் குடைபிடித்து தவிர்கிறேன் துளிகளை... பெய்யும் மழை அழுக்கு தரை கழுவி கால் நனைக்க திட்டிக்கொண்டும் அருவருத்துக்கொண்டும் விலகிநகர்கிறேன். குடைதள்ளி விளையாட முனையும் காற்றை ஜெயிக்கவிடாது தடுக்கிறேன். காத்திருப்புக்கு மத்தியில் வந்து சேர்க்கிறது பேருந்து விரைவாக ஏறி இருக்கையில் அமர்ந்து மூடிய ஜன்னல் வழியே பார்த்தால் தோன்றுகிறது 'அடடா! என்ன அழகு இந்த மழை'.