Posts

Showing posts from November, 2012
Image
அழுக்கு சூரியன்கள்... பரந்து விரிந்த பிரபஞ்ச வெளியில்... நிறைந்து கிடக்கிறது பல கோடி சூரியன்கள் நம் கண்ணுக்கு எட்டிய சிறுதூரம் தான் உண்மை என்று எண்ணிக்கிடக்கின்றோம் இன்றுவரை... நம் கண்ணில் கண்ட ஒரு சூரியனை ரட்சகன் என்றெண்ணி கண்ணில் ஒற்றிக்கொள்ளும் மடமைகளுக்கு புரிவதில்லை வாழ்வின் நிஜங்கள் விடிந்த பின்னர் வந்த சூரியன்கள் வாழ்வின் விடிவுகளை தீர்மானிப்பதில்லை சூரியன் இல்லாது விடிந்த பொழுதுகள் உண்டு உலகில் சூரியன் இல்லாது விட்டாலும் விடியும் பொழுது விடிந்ததே தீரும் கவனிக்க .... பலகோடி நிலவுகளும் உண்டு உலகில் அதற்கென்று தனி ஒளியும் உண்டு சில சூரியன்கள், தன் ஒளியை வீசி நிலவொளியை மறைத்து வாழ்வளித்த வள்ளல் என்று போலிப்பெருமை பேசுகிறது நிலையின்றி சுற்றி வரும் நிலவுகள் தான் அவை மேகம் மறைக்க மறைக்க அதிலிருந்து மீளும் நிலைகள் எப்போதுமே அவற்றுக்கு உண்டு அமாவாசையில் மறைக்கப்படும் நிலவுகள் தொலைந்துபோவதில்லை பௌர்ணமிகள் அதற்கு எப்போதும் உண்டு பூமி தொலைந்தாலும் நிலவில் வாழ்வோம் என்ற நம
Image
ஒரு காட்சி ...சில எண்ணங்கள் ... பர்பி படத்தில் பாடல்கள் அருமையானவை இந்த பாடல் அழகானதுதான் ரசிக்க கூடிய பல காட்சிகளை உள்ளடக்கிய இந்த பாடலில் ஒரு காட்சி முக்கியமானது ரன்பீரும் பிரியங்காவும் லாரியில் பயணிக்கையில் பிரியங்கா தூங்கிக் கொண்டிருப்பார் மனவளர்ச்சி குன்றிய பிரியங்காவின் ஆடை விலகி கால்கள் தெரியும் அதை உற்றுபார்ப்பார் சக பயணி ஒருவர் ஆடையை சரிப்படுத்தி விட்டு "இதைப்பார் " என்று தன் காலைக் காட்டுவார் ரன்பீர் மிக குறுகிய நேரம் இடம் பெறும் இக்காட்சி என்னை நீண்ட நேரம் யோசிக்க வைத்தது இந்த காட்சியில் எத்தனையோ விடயங்களை மறைமுகமாக காட்டி இருக்கிறார் இயக்குனர் ஒரு பெண்ணின் உடல் பாலுணர்வு அடிப்படையிலேயே நோக்கப்படுகிறது அவள் மனவளர்ச்சி குன்றியவளாக இருந்தாலும் அது பற்றிய கவலை இல்லை பெண் மீதான உடல் அரசியல் இது பெண்ணின் உடல் மீது, சொல்லப்போனால் சதை மீது ஏற்படும் அந்த உணர்வு ஆண் மீது தோன்றாததுக்கு ஹார்மோன்கள் மட்டும் தான் காரணமா? இந்த படத்தில் வரும் பர்பி மாதிரி எத்தனை ஆண்கள் பெண்ணை அவள் உடல் தவிர்த்து சக மனிஷியாய் பார்கிறார்கள் மிக சொற்பமே ...
Image
பயணம்... கொட்டும் மழை ஒற்றைக் குடை நீயும் நானுமாய் தனியே ஒரு பயணம் என் கனவுச்சாலையில்...
Image
The Red Balloon சிறு வயதில் பலூன்கள் மேல் எனக்கு அளவிடமுடியாத ஆசை இருந்தது. அதே ஆசை இன்று இருக்கிறதா என்றால் பதில் சொல்லத்தெரியவில்லை பலூன்களைப்பார்க்கும் போது ஒரு இனம்புரியாத ஆர்வம் ஏற்பட்டாலும் நான் ஒன்றும் சின்னப்பிள்ளை இல்லை என்ற எண்ணம் வர அடுத்த நிமிஷம் ஆர்வம் குன்றிப்போய் விடும் பாலூன்களோடு சேர்த்து எனது சிறு பராயமும் தொலைந்துவிட்டது. தொலைந்து போன நினைவுகளை மீட்டிப்பார்க்க வைத்தது ஒரு குறும்படம் "The Red Balloon" பள்ளிக்கு செல்லும் ஒரு சிறுவன் மின் கம்பத்தில் சிக்கிகொண்டிருக்கும் ஒரு பலூனை காண்கிறான் சிவப்பு நிறத்தில் பெரிதாய் இருக்கும் அந்த பலூனை பார்க்க எனக்கே ஆசை வருகிறது என்றால் , அந்த சிறுவனுக்கு ஆசை வராமலா இருக்கும் ? பலூனை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு செல்ல தொடங்குகிறான். பலூனோடு   வரும்   சிறுவனை   பேருந்தில்   ஏற்ற   மறுக்கிறார்   நடத்துனர் . பலூனை பிரிய மனமில்லாத சிறுவனும் பலூனை எடுத்துக்கொண்டு ஓடத்தொடங்குகின்றான் . பலூனை பள்ளியின் உள்ளே எடுத்து செல்ல முடியாத காரணத்தால்  பள்ளிப்பணியாளரிடம்   ஒப்படைத்து   விட்டு பள்ளி முடிந்த
Image
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி... ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி உனக்குள் நான் வாழும் விபரம் நான் கண்டு வியக்கிறேன் வியர்க்கிறேன் எனக்கு நான் அல்ல உனக்கு தான் என்று உணர்கிறேன் நிழல் என தொடர்கிறேன் ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி விழி அல்ல விரல் இது ஓர் மடல் தான் வரைந்தது உயிர் அல்ல உயில் இது உனக்குத்தான் உரியது இமைகளின் இடையில் நீ இமைப்பதை நான் தவிர்க்கிறேன் விழிகளின் வழியில் நீ உறக்கம் வந்தால் தடுக்கிறேன் காதல் தான் எந்நாளும் ஒரு வார்த்தைக்குள் வராதது காலங்கள் சென்றாலும் அந்த வானம் போல் விழாதது தூரத்து மேகத்தை துரத்தி செல்லும் பறவை போலே தோகையே உன்னை நான் தேடியே வந்தேன் இங்கே பொய்கையை போல் கிடந்தவள் பார்வை என்னும் கல் எறிந்தாய் தேங்கினேன் உன் கையில் வழங்கினேனே என்னை இன்றே... தோழியே உன் தேகம் இளம் தென்றல் தொடாததோ தோழனே உன் கைகள் தொட நாணம் தான் விடாததோ காதல் ஒரு அழகான பரவச உணர்வு, பலர் சொல்லக் கேட்டிர

The Shawshank Redemption

Image
The Shawshank Redemption நம்பிக்கை இருக்கும் வரைக்கும் தான் வாழ்க்கை .அந்த நம்பிக்கை இல்லாமல் போனால் எதுவுமே இல்லை என்பார்கள் . சின்ன சின்ன தோல்விகள் ,மனக்கவலைகள் வந்தாலே நம் நம்பிக்கை தொலைந்துபோய்விடும். எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் நம்பிக்கை இழக்காமல் இருக்க முடியுமா ? அதுவும் துரோகம் ,குற்றம் சாட்டப்படல்,சிறைக்கு அனுப்பப்படல்,அடி உதைகள்,வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்படல் ...இப்படி தொடர்ச்சியாக பல பிரச்சினைகள். இவை அனைத்தும் ஒருவன் வாழ்வில் நடந்தால் அவனால் எப்படி நம்பிக்கையோடு வாழ்வை  எதிர்கொள்ள முடியும் ? அப்படி ஒருவனால் வாழ முடியுமா ? வாழமுடியும் ! ஒருவன் இருபது வருடங்களுக்கு மேலாக இத்தனை கொடுமைகளையும்  அனுபவித்துக் கொண்டு நம்பிக்கையுடன் வாழ்ந்தான் என்றால் நம்புவீர்களா ?... நம்பிக்கையுடன் வாழ்ந்தவனை நம்ப சொல்கிறது இந்த சினிமா The Shawshank Redemption