Posts

Showing posts from June, 2012
Image
பறக்கிறது இந்தக் காட்டையும் விட்டு தன்னந்தனியே நிற்கின்றேன் நான் தலைக்கு மேலே தெரியும் வானம் என் மனதைப்போல முற்றிலும் வெறுமையாய் ... காலணிகளை துறந்து வெற்றுக்கால்களில் நிற்கின்றேன் நான் காய்ந்து போய் குத்தும் மணல்கள் வலிக்கிறது இதயத்தில் .... என் இயலாமையில் நிறையும் வாழ்க்கை நிரப்பபடாத இந்த கானகத்தில் ? என தேடி அலைகின்றேன் நான் .... நான் தேடி அலைவது என்னை எனக்கான அடையாளத்தை அடைவேனா என்னை ? நரமயமாக்களில்... தாராளமயமாக்கலில் ... உலகமயமாக்களில் ... ஆட்பட்டு போன உங்களுக்கு காடு என்பதன் பொருள் என்ன ? வெறும் மரம் சூழ்ந்த பகுதியல்ல காடுகள் பயங்கர விலங்குகள் நிறைந்த இடமோ வாழத்தகுதியற்ற உறைவிடமோ அல்ல காடுகள் ... பல்லாயிரம் வருடமாய் செழித்து நெடிந்துயர்ந்து வான்தொட்டு நிற்கும் மரங்களும் செடிகொடி தாவரங்களும் இருவாச்சிகள் இரவாடிகள் இறைச்சி உண்ணிகள் பெரிய காட்டுயிர்களும் புழு பூச்சிகள் பறவைகள் நீருயிர்கள் என இயற்கை கூறுகள் அனைத்தும் இணைந்த எண்ணற்ற உயிரினங்களின் வாழ்வாதரமான அற்புத கட்டமைப்பே காடு அதுவே எங்கள் வீடு காடு அது தனி உலகம் உயிரோட்டமாய் வ
Image
  கனாப் பொழுதில்... மனித சுவாசம் போல கனவு தேசம் கருவறை காரிருள் நீர்த்து பிறக்கையிலேயே கனவுகள் கவ்விக் கொள்கின்றன. வாழ்வின் சுவை அறிய செய்யும் விதவிதமான கனவுகள் நாம் வாழ்கிறோம் என்பதை உறுதிப்படுத்தும் கனவுகள் எமக்கு மட்டும் சொந்தமில்லை .... யாருமேயின்றி அனாதையாக நகரும் பொழுதுகள் கானாப் பொழுதில்.... விழிகள் மூடினாலும் திறந்தாலும் இருள் சூழ்ந்த அறை உலகின் தரிசனங்கள் நித்தமும் சிறைவைக்கப்பட்ட சிதைந்து போன கனவுகளுடன் காலம் கடத்துபவர்களின் நிலையை யாரறிவார் எல்லோருக்கும் கனாப் பொழுதுகள் எங்களுக்கு பொழுதுகளே கனாவாய் .... கனப்பொழுதில் கடக்கிறது பேருந்து ... சிறைசாலை வழியே போகும்போதும் வரும்போதும் தெரியும் நீளவாக்கில் உயரமான சுவரால் ஆன கட்டிடம் திரும்பிப்பார்க்காமல் போகமுடியாது அந்த சிறைமதில்களை காரணம் அந்த மதில்கள் சுமந்திருக்கும் கனவுகள் ஒவ்வொரு கைதியினதும் கனவுகள் நீங்கள் என்ன உணர்வீர்கள் கடந்துசெல்லும் வழியில் சிறைச்சாலை இருந்தால்..... எப்பொழுதும் கடந்து விடுகிறோம் நாம் அதை வெறும் கட்டிடமாக நினைத்து -ஆனால் அந்த கட்டிடத்திற்குள் எத்
Image
ஆராத மனக்களிப்போடழுத கண்ணீர் ! எத்தனை கண்ணீர் வாழ்க்கையில் வந்து போனாலும் ஓர் கண்ணீர்க்கு மட்டும் ஒப்பில்லா உயர்வுண்டு உலகில் -ஏனெனில் அதுமட்டுமே ஆராத மனக்களிப்போடழுத கண்ணீர் ! என் கண்முன்னே தெரியும் உலகம் இன்று மட்டும் ஏதோ விசித்திரமாய் …. சூன்யப் புள்ளிகளில் சுற்றி திரியும் மனதில் மெல்ல எழுகின்றது பயத்தின் புகை மடல்கள் மரண முடிவும் ஜீவ தொடர்ச்சியும் நிலைபெறும் போது ஓர் சுழற்சியில் சிக்கி தவிக்கிறது மனது சிற்றூசிகளை கொட்டிக்குத்தியத்தைப்போல வயிற்றில் ஓர் பிடிப்பு முளைக்கத்துடிகும் விதை நேரம் பார்க்கும் பொழுதாய் நான் தாயாகும் இந்த பொழுது உடல்வலி ....மன வலி ..எல்லாம் கடந்து நினைவுகள் நீள்கிறது என் தாயை நோக்கி ..... என் விழிகளுக்குள்ளே வலிகளைத்தாண்டி அவள் முகசுருக்கங்களில் கனவுகளையும் கவலைகளையும் தேக்கி வைத்து ஏக்கத்துடன் பார்த்த பார்வைகள் எதுவும் பேசாமல் மௌனங்கலாலேயே என் மனம் படித்தவளின் குரல் என் காதுகளின் அருகாமையில் ... என் கண்ணே என்னவளே என் உயிரில் உதித்த உறவே .... அழுத்தத்தை உதறி அவிழும் கம்பி சுருலென எழும் என் தாய்மையின் நினைவ